ஓ.. என் சமகாலத் தோழர்களே..! | இரத்த தானம் | கவிப்பேரரசு வைரமுத்து
ஓ.. என் சமகாலத் தோழர்களே..!
கிளிக்கு றெக்கை இருக்கும் வரையில் கிழக்கு வானம் தூரமில்லை!
முளைக்கும் விதைகள் முளைக்கத் துடித்தால் பூமி ஒன்றும் பாரமில்லை!
பாய்ந்து பரவும் இளைய நதிகளே, பள்ளம் நிரப்ப வாருங்கள்!
காய்ந்து கிடக்கும் கழனிகள் எங்கும் கதிர்கள் சுமந்து தாருங்கள்!
முன்னோர் சொன்ன முதுமொழி எல்லாம் முதுகில் சுமந்தால் போதாது!
சொன்னோர் கருத்தை வாழ்க்கைப் படுத்தத் துணிந்தால் துன்பம் வராது!
காட்டும் பொறுமை அடக்கம் என்னும் கட்டுப்பாட்டைக் கடவாதீர்!
கூட்டுப் புழுதான் பட்டுப்பூச்சியாய் கோலம் கொள்ளும் மறவாதீர்!
அறிவை மறந்த உணர்ச்சி என்பது திரியை மறந்த தீயாகும்!
எரியும் தீயை இழந்த திரிதான் உணர்ச்சி தொலைத்த அறிவாகும்!
பழையவை எல்லாம் பழமை அல்ல பண்பும் அன்பும் பழையவைதான்!
இளையோர் கூட்டம் ஏந்தி நடக்க இனமும் மொழியும் புதியவைதான்!
அறிவியல் என்னும் வாகனம் மீதில் ஆளும் தமிழை நிறுத்துங்கள்!
கரிகாலன் தன் பெருமையெல்லாம் கணிப்பொறியுள்ளே பொருத்துங்கள்!
ஏவும் திசையில் அம்பைப் போல இருந்த இனத்தை மாற்றுங்கள்!
ஏவுகணையிலும் தமிழை எழுதி எல்லா கோளிலும் ஏற்றுங்கள்!
ஓ..! என் சமகாலத் தோழர்களே..!
“இரத்த தானம்”
– கவிப்பேரரசு வைரமுத்து
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



?????
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
நாம் தமிழர்……
சூப்பர் அண்ண
நம்பிக்கையின் மறு உருவமே காலை வணக்கம் நாம் தமிழர்
எனது 9ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருந்த பாடல் இது
அப்பொழுது இதன் அருமை எனக்கு புரியவில்லை
இப்பொழுது புரிகிறது
நாம் தமிழர்
சிறப்பு
வெற்றிக்கு முதல் படியே திட்டமிடுதல் …
சிறப்பு ☝️???♥️
?????❤️Seeman
???
இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ?????????
தமிழனிடம் ஆட்சி இருக்க வேண்டும் ?????????????
Thank you for this .