எதிர்ப்பைக் கண்டு அஞ்சாதீர்கள்! – ‘கலைமாமணி’ இளசை சுந்தரம் | நாளும் பல நற்செய்திகள்
நாம் இப்போது இருக்கும் நிலைக்கு
நாமே பொறுப்பு!
நம்மை உயர்ந்த நிலைக்கு
கொண்டுவரும் ஆற்றல்
நம்மிடம்தான் இருக்கிறது!
இந்த நம்பிக்கை நமக்கு வேண்டும்!
பிரச்சனைகள் வரும்போது
பொறுமையுடன் போராடினால்,
நமக்கான 'காலம்' வந்தே தீரும்!
எல்லாக் குணங்களிலும் சிறந்தது
மௌனமே!
அதன் மூலம், பிறர் குறைகளை அறியவும்,
நமது குறைகளைக் களையவும் முடியும்!
பேசாத 'மொழி'
நம் கையில் இருக்கும் வாள்!
பேசிவிட்டால்,
அது எதிரிக்கு கொடுத்துவிட்ட வாள்!
நல்ல பேச்சு,
நடத்தை,
தேகப் பலத்திற்கு விளையாட்டுகள்,
பயிற்சிகள்
இவைகளில் நாட்டம் கொள்வது நல்லது!
நேர் வழியில் அடையமுடியாத ஒன்றை,
தவறான வழியில் அடையவே முடியாது!
ஆற்றலோடு, நுண்ணறிவும் சேர்ந்துவிட்டால்,
அடைய முடியாத ஒன்று இந்த உலகில் இல்லை!
பிறர் துன்பம் கண்டு இரங்குதல்
'மனித குணம்'
அதை நீக்க உதவி செய்வதே
'தெய்வ குணம்'
உன்னிடம் உதவி பெற்றவர்கள்,
அதை மறந்தால் அது அவர்களின் குற்றம்!
உதவி செய்யாவிட்டால்
அது உனது குற்றம் !
நாம் கொடுக்கும்போதுதான்
நமது பணம் நம்முடையதாகிறது!
நல்லது செய்தாயா?
அதைப்பற்றிப் பேசாதே!
நல்லதைப் பெற்றாயா?
அதைப்பற்றிப் பேசு!
நாம் வணங்க ஆரம்பிக்கும்போதுதான்,
வளர ஆரம்பிக்கிறோம்!
தோல்வி என்பது
வெற்றி அடைவதற்கு
உங்களுக்கு ஏற்படும் இடைவெளிதான்!
அது உங்களின் வீழ்ச்சி அல்ல;
தற்காலிக தடைதான்!
சாவி கையில் இருக்கும்போது,
பூட்டைப் பார்த்துப் பயப்படாதீர்கள்!
'விதி' ஒரு கதவை சாத்தினால்,
'நம்பிக்கை' இன்னொரு கதவைத் திறக்கும்!
'வெற்றி' மாளிகையின்
கதவைத் தட்டிக்கொண்டே இருங்கள்!
எப்படியும் கதவுத் திறக்கும்!
வாயையும், பணப்பையையும்
திறக்கும்போது கவனமாக இருங்கள்!
வாயை திறக்கும்போதுதான்
மீன்களே தூண்டிலில் மாட்டிக்கொள்கின்றன!
எதிர்ப்பைக் கண்டு அஞ்சாதீர்கள்!
முன்னேற்றத்திற்கு எதிர்ப்புகள் இன்றியமையாதவை
என்பதை மறந்துவிடாதீர்கள்!
– 'கலைமாமணி' இளசை சுந்தரம்
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



நாம் தமிழர் ?