இலையும் கல்லும்! – பகுதி 2 | நாளும் பல நற்செய்திகள் | இறையன்பு
இலையும், கல்லும்!
ஓர் இலையும், ஒரு கல்லும் நதிக்கரையில் கிடந்தன.
இலையைப் பார்த்து கல் சொன்னது, எனக்கு ஒரு ஆசை. நான் இந்த நதி கடலில் விழுகிற இடம்வரை, அதில் நீந்தி பயணம் செய்ய வேண்டும். அதன் அசைவுகளெல்லாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இலை சொன்னது, அது உன்னால் முடியாது. விழுந்த மாத்திரத்தில் நீ மூழ்கிப்போவாய். ஏன்? நீ அடர்த்தியாய், கனமாய் இருக்கிறாய். உன் கனத்தினால் இத்தனை நாள் பெருமைப்பட்டாய். கனத்தினால் உன் மீது மோதியவர்களுக்கெல்லாம் காயம்பட்டது. நீ கர்வப்பட்டாய். கனமிருப்பது நீந்த முடியாது.
அப்போது, அந்த வழியாக வந்தவன் காலால் எத்தியதில் இலையும், கல்லும் நதியில் விழுந்தன. கல் அடுத்த நொடியே நதியின் அடியே சென்று அமர்ந்தது. இலை நதியினூடே அழகாக மிதந்து சென்றது. அந்த சுகமான பயணத்தில் திளைத்தது. பூமியின் சகல பரிமாணங்களையும் அது உணர்ந்து கொண்டது.
பலர் கல்போல் இருக்கிறார்கள். பெருமை என நினைக்கிறார்கள். அவர்கள் தலை கனத்திருப்பதால் மூழ்கிப்போய் வாழ்வின் அடித்தளத்திலேயே தங்கிவிடுகிறார்கள். கல் கனமாய் இருப்பதால் பிடிவாதமாய் இருக்கிறது. பிடிவாதத்துடன், அடமாய் இருப்பவர்களால் வளர முடிவதில்லை. வளர்ச்சிக்கு எதிராய் தங்களை இறுக்கிப் பிடித்துக்கொள்கிறார்கள்.
சருகு போல் மென்மையாய் இருப்பவர்கள்தான் நதியின் ஓட்டத்திற்குத் தன்னை ஒப்படைக்க முடியும். சருகு நதியோடு சண்டை போடுவதில்லை. அதனால்தான் அது மிதக்க முடிகிறது. கல் திடமாக இருந்து நதியிடம் தோற்றுப்போகிறது. சருகு மென்மையாக இருந்து நதியிடம் கை குலுக்குகிறது.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates