SivagangaiDistrict.com

Login Here


Home News Papers Sivagangai Dinakaran Tamil News Paper
Sivagangai District Tamil News Papers
Dinakaran.com |30 May 2015


Dinakaran No.1 Tamil Daily News Paper - Tamil News Paper | Tamil Latest News | India News | World News |  Breaking News | Latest Headlines
 • பெண் ஊராட்சி செயலரிடம் செயின் பறிப்பு

  சிவகங்கை: காளையார் கோவிலில் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த பெண் ஊராட்சி செயலரிடம் செயினை பறித்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். காளையார் கோவில் வஉசி நகரைச் சேர்ந்த சீனிவாசன் மனைவி திருவேங்கட லெட்சுமி (38). இவர் காளையார் கோவில் ஒன்றியம் இலந்தக் கரை ஊராட்சி செயலராக உள்ளார். நேற்று இவர் தனது வீட்டில் குழந்தைகளுடன் சேர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பின்புறம் வழியாக முகமூடி அணிந்த ஆசாமி ஒருவன் சப்தமில்லாமல் உள்ளே புகுந்தான். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில், திருவேங்கட லெட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த நான்கு ... • பஞ்சாலையில் திடீர் தீ 2 பேர் படுகாயம்

  சிவகங்கை: காளையார் கோவிலில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான பஞ்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர். சிவகங்கை மாவட்டம், காளையார் கோவிலில் மத்திய அரசின் தேசிய பஞ்சாலை கழகத்தின் கீழ் இயங்கும் காளீஸ்வராமில் உள்ளது. நேற்று காலை 10 மணியளவில் மின்கசிவு காரணமாக பஞ்சாலையின் 'ஏ பிளான்ட்' பகுதியில் திடீரென தீப்பிடித்தது. அருகில் பஞ்சுமூடைகள் இருந்ததால், தீ மளமளவென பரவ தொடங்கியது. பணியில் இருந்த தொழிலாளர்கள் தீயை அணைக்க முயன்றனர்.தொழிலாளி அருண் (34) தீயை அணைக்கும் போது தடுப்பு உடைந்து கீழே விழுந்தார். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ... • தேனி யூனியன் கூட்டத்தில் திமுக கவுன்சிலர் வெளிநடப்பு

  தேனி: தேனி ஊராட்சி ஒன்றிய சாதாரணக் கூட்டம் நடந்தது. யூனியன் தலைவர் அம்சகோமதி தலைமை வகித்தார். பொது விவாதம் நடந்த போது அதிமுக உறுப்பினர் கிருஷ்ண சாமி எழுந்து, தமிழக முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார். இதற்கு திமுக உறுப்பினர் குருசாமி, இது ஒன்றும் சட்ட மன்றம் இல்லை. உள்ளாட்சி மன்றம் என்பதை அதிமுக உறுப்பினர் புரியாமல் வாழ்த்து தீர்மானத்தை இங்கு நிறைவேற்ற வேண்டும் என்கிறார் என்றார். தொடர்ந்து பேசிய கிருஷ்ணசாமி, ஆர்கே நகர் தொகுதியில் ஜெயலலிதா லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி ... • பாம்பு கடித்து சிறுமி பலி

  திருப்புவனம், : திருப்பாச்சேத்தி அருகே தூதை கிராமத்தை சேர்ந்தவர் நாகேந்திரன். இவரது மகள் முத்துலட்சுமி(12). வீட்டில் இருந்தபோது பாம்பு கடித்து பலியானார். வெளியே சென்றிருந்த பெற்றோர் வீடு திரும்பிய போது முத்துலட்சுமி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரை கடித்த பாம்பு அருகிலேயே படுத்திருந்தது. அதை உறவினர்கள் அடித்து கொன்றனர். சிறுமி இறந்தது குறித்து திருப்பாச்சேத்தி போலீசார் விசாரித்து ... • தஞ்சமடைந்த காதல்ஜோடிக்கு காவல் நிலையத்தில் திருமணம்

  சிவகங்கை, :  சிவகங்கையில் பெற்றோர் எதிர்ப்பை மீறி காவல்  நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடிக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.சிவகங்கை அருகே வண்டவாசியைச் சேர்ந்தவர் இருளன். இவரது மகன் செல்வம்(22). இவர் சிவகங்கையில் தொண்டிரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சிவகங்கை அருகே உடையநாதபுரத்தை சேர்ந்த அழகப்பன் மகள் தாமரைசெல்வி(20). செல்வத்தின் உறவினர் வீடு உடையநாதபுரத்தில் உள்ளது. அங்கு  செல்வம் சென்று வந்த போது, தாமரைசெல்வியுடன் ஏற்பட்ட பழக்கத்தில் காதல் ஏற்பட்டது. ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தும், இவர்களின் காதலுக்கு ... • ரயில்வே ஸ்டேஷனில் பழுதாகி கிடக்கும் குடிநீர் குழாய்கள் தண்ணீர் தாகத்தால் பயணிகள் தவிப்பு

  மானாமதுரை, : மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் குடிநீர் குழாய்கள் பழுதடைந்துள்ளதால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரயில்நிலையத்தில் இருந்து சென்னை, மதுரை, விருதுநகர் மார்க்கமாக நாள்தோறும் 14 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இது தவிர வாரணாசி, புவனேஸ்வர், ஓகா, கோயம்புத்தூர், கன்னியாகுமரி உள்ளிட்ட வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் செல்வதற்கு ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மூன்று ... • அம்மன்களின் நகரம்

  சிவகங்கை, :பொதுவாக பெண்களை தெய்வமாக வழிபடுவது நமது மரபாக உள்ளது. தமிழகம் முழுவதும் எத்தனையோ அம்மன் கோயில்கள் உள்ளன. அதுவும் விதவிதமான பெயர்களில். ஆனால் நமது காரைக்குடி நகரில் எண்ணிலடங்கா அம்மன் கோயில்கள் உள்ளன. இவற்றில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. விதவிதமான நேர்த்திக்கடன்களை செலுத்துகின்றனர். உதாரணமாக காரைக்குடி பாலையூர் முத்துமாரியம்மன் கோயில், ஆத்தங்குடி ஆ.முத்துபட்டணம் லோகநாயகி அம்மன் கோயில், ஜெயங்கொண்டான் பாலசுப்பிரமணியர் கோயில், கோட்டையூர் முத்துமாரியம்மன் கோயில், கணேசபுரம் மாரியம்மன் கோயில், ... • தமாகா மாநில செயலாளர் நியமனம்

  காரைக்குடி, : தமிழ் மாநில காங்கிரஸ் மாநில செயலாளராக சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சி தலைவர் மாங்குடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தலைவர் பதவியில் பல்வேறு பணிகளை செய்துள்ளார். மேலும், காரைக்குடி பகுதியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை தமாகா கட்சியில் உறுப்பினர்களாக சேர்த்துள்ளார். தனது செயல்பாடுகளை பாராட்டி தமாகாவில் மாநில செயலாளராக நியமித்த தலைவர் ஜி.கே. வாசன் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு மாங்குடி நன்றி தெரிவித்துள்ளார்.    ... • மருத்துவ சமுதாயத்தினர் ஆர்ப்பாட்டம்

  சிவகங்கை, :தமிழ்நாடு மருத்துவர் சமுதாயப் பேரவையினர் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் தமிழரசன் தலைமை வகித்தார். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள மருத்துவர் சமுதாயத்திற்கு 5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். வன்கொடுமை சட்டத்தை விரிவுபடுத்தி மருத்துவர் சமுதாயத்தினர் பயன்படும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. முன்னதாக சிவகங்கை அரண்மனை வாசலிலிருந்து துவங்கிய ஊர்வலம் கலெக்டர் அலுவலகம் முன்பு முடிவடைந்தது. கோரிக்கை மனுவை கலெக்டர் முனுசாமியிடம் ... • லாரி விபத்து 4 பேர் படுகாயம்

  சிவகங்கை, : சிவகங்கை அருகே சரக்கு லாரி கவிழ்ந்ததில் 4 பேர் காயமடைந்தனர். சிவகங்கையிலிருந்து மதகுபட்டிக்கு தனியார் பொருட்களை சப்ளை செய்யும் சர்வீஸ் லாரி நேற்று காலை சென்று கொண்டிருந்தது. டிரைவர் மாரி ஓட்டிச் சென்றார்.இலந்தங்குடிபட்டி கண்மாய்கரையில் சென்றபோது லாரி சாலையோர மரத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த கூலி தொழிலாளர்கள் திருப்பாச்சேத்தி கிருஷ்ணமூர்த்தி(30), ராஜாராம்(36), ராஜா(30) காயமடைந்தனர். சிவகங்கை டவுன் போலீசார் விசாரித்து ...Latest Info

Scan it with Smart Phone [Iphone / Android / Blackberry & etc.,]

Share This Page


 

Latest Info